உ
சிவமயம்
திரு ஆருரா! தியாகேசா !
நால்வர் வழி யாத்ரா திருகூட்டம்
தினசரி மாலை 7 மணி முதல் 7.05 மணி வரை வழிபாட்டு முறை
உலகத்தில் உள்ள சிவனடியார்களும் , அயலார்களும்
திருஆரூர் பெருமானின் திருஅருள் துணை கொண்டு
தினசரி மாலை 7 மணி முதல் 7.05 மணி வரை வடதிசை
நோக்கி அவரவர் விண்ணப்பங்கள் , வேண்டுதல்களை
இந்த குறிபிட்ட நேரத்தில் வைத்து கூட்டு வழிபாடு பிரார்த்தனைகளை
கடைபிடிக்குமாறு கேட்டுகொள்ளபடுகிறார்கள்.
இந்த வழிபாடு நேரத்தில் சொல்லவேண்டிய பதிகங்களும் , முறைகளும்
1 எந்த இடத்திலும் இந்த குறிப்பிட்ட நேரத்தில் வட திசை நோக்கி பிரார்த்தனை
செய்யலாம் .( கைலாயம் வட திசையில் இருப்பதினால் )
2 முதலில் அவரவர் விண்ணப்பங்களை பெருமானை நினைத்து வைக்க வேண்டும்
3 நால்வர் துதி சொல்லி வழிபாட்டினை தொடங்க வேண்டும் .
பூழியர் கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல் போற்றி
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடி போற்றி
வாழி திருநாவலூர் வன் தொண்டர் பதம் போற்றி
ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி,,,,,
4 சிவாய நம முடிந்தவரை சொல்ல வேண்டும்.
5 வான்முகில் வழாது பெய்க என தொடங்கும் வாழ்த்து சொல்லி முடிக்க வேண்டும்.
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்
திருஆருரா வீதிவிடங்கா
நாமும் நாடும் வளம் பெற தினசரி 7 மணி அளவில் ஒரு ஐந்து நிமிடம் ஆரூர் பெருமான்
உலக உயிர்கள் உய்யும் பொருட்டு அருள் புரிய பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம் .
மேலும் தொடர்புக்கு :
சிவத்திரு . மாரிமுத்து ஐயா
திருஆரூர்
9842545536
No comments:
Post a Comment